புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!
மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன.
அதை கருத்தில்கொண்டும், கொரோனா தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின...
