ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு – தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் திருட்டு - தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!
பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் (வயது 92). இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி அமைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., ராஜ்குமார், பிரேம்நசீர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து தரப்பு கதாநாயகர்கள் படங்களுக்கு சண்டை பயிற்சி அமைத்து உள்ள இவர் தற்போது வயது மூப்பின் காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி ஜூடோ ரத்தினம் சென்னையில் திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் அவரின் வீட்டின் கதவு திறந்திருப்...
