நடிகர் விஷாலின் ஸ்னீக் பீக் விடியோ!
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்து என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் அறிவிக்கப்பட்டபடி 26-ந்தேதி வெளியாகவில்லை.
பிறகு இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதா...


