கோடிகளை கொட்டி ஏற்படுத்திய பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார் – வைகோ
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம்...
