இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் – அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து
இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம். உலகின் தொன்மை மொழியான தமிழோ பேரடையாளம் - அறிக்கையில் தெறிக்க விடும் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது. இந்த வினாவைப் போகிற போக்கில் புறந்தள்ள முடியாது. ஓர் அதிகாரியின் தனிக்குரல் என்று இதை எடுத்துக்கொள்ள முடியாது. ஆதிக்கத்தின் அம்பறாத் தூணியிலிருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைத்த அம்பு அது. தலையால் சிந்திக்கிற யாரும் இப்படி ஒரு வினாவை வீசியிருக்க முடியாது. மீண்டும் எங்கள் நெருப்பு தன்மீது பூத்திருக்கும் நீறுகளைக் காற்றில் ஊதிக் கங்கு காட்ட வேண்டிய காலம் இது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை நோக்கி மட்டும் கேட்கப்பட்...
