புதன்கிழமை, மே 20
Shadow

Tag: வைரமுத்து வாழ்த்து

எம்பி பதவியேற்பின் போது  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

எம்பி பதவியேற்பின் போது தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து சமீபத்தில்நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கடந்த இரு தினங்களாக பதவி ஏற்றனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.’’ என பதிவிட்டுள்ளார். வைரமுத்து பதிவிட்ட வாழ்த்து வைரல் ஆ...