அடுத்ததாக ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு வைரஸ் தொற்று உறுதி!
அடுத்ததாக ஒரு திமுக எம்.எல்.ஏ.க்கு வைரஸ் தொற்று உறுதி!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. கொரானா தொற்று பாதிப்புக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அரசுவுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....
