ஷூட்டிங் தொடங்க அனுமதி கேட்டு அமைச்சரை சந்தித்த தயாரிப்பாளர்கள்!
திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.
தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் ...
