அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 7 அறிவுரைகள்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரானா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரானா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரானா தொற்றிலிருந்து தமிழகத்தை காப்பாற்ற 7 முக்கிய ஆலோசனைகளை அரசுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பல்துறை வல்லுநர்கள் கருத்துக்களைக் கேட்டு முதல்வரின் கவனத்திற்கு ஆலோசனைகளை அளிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று கிராமப்புறங்களில் பரவலாக மாறிய நிலையில் பல்வேறு மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 7 முக்கிய ஆலோசனைகள் :
மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதார இழப்பை சமாளிக்க அனைவரின் கையிலும் பணப்புழக்கம...
