கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி
கொரானா உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதல் காரணமாக உலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்து வரும் நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரானா தொற்று காரணமாக நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசாவும் பாதிக்கப்பட்டார்.
ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரானா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார்.
கொரானா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணமாக சிகிச்சை பலன் இல்லாமல் இளவரசி மர...
