ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!
தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள்.
சர்வதேச தரத்தில் இருக்கும் இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films), நாசிக் ராவ் மீடியா (Nasik Rav Media) மற்றும் கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில், ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற ...
