ஹோலி பண்டிகை களைகட்டிய சென்னை சவுகார்பேட்டை!
ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வட மாநிலத்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையிலும் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களை கட்டுவது வழக்கம்.
அந்த வகையில் ஹோலி பண்டிகை தினமான இன்று சென்னையில் ஹோலி கொண்டாட்டங்கள் உற்சாகமாக களை கட்டி காணப்பட்டது.
வட மாநிலத்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று திரண்டனர். அப்போது கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது தங்களது நண்பர்கள், உறவினர்கள் பலரையும் வீட்டுக்கு அழைத்திருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களை வரவேற்கும் விதமாக முதலில் முகத்தில் லேசாக வண்ணப்பொடிகளை பூசினர்.
பின்னர் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி...
