வெள்ளிக்கிழமை, மே 17
Shadow

Tag: துருக்கி

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்!

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள...
தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த விமானம்! துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது. மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். வானிலை மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் உடைந்த விமானம் மற்றும் அதன் உட்பக...