வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: பசுபதி

உறியடி விஜயகுமார் நடிப்பில் கன்னிமாடம் போஸ்வெங்கட் இயக்கும் விளையாட்டுப்படம்!

உறியடி விஜயகுமார் நடிப்பில் கன்னிமாடம் போஸ்வெங்கட் இயக்கும் விளையாட்டுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்* மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது. ...