திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பிளஸ்-2 தேர்வு

பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரள மாநிலத்தில் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்ணும் பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி மோளுக்கு கடுமையான மூச்சு திணறல் நோய் ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் அவர் பிளஸ் 2-தேர்வை எழுதியே தீருவேன் என உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து அவரது உறவினர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை, சிமிமோளை, ஆக்சிஜன் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து சென்றனர். அவரது நிலைமையை பார்த்த தேர்வு அதிகாரிகள், சிமி மோள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி கொடுத்த...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலா...
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு! கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நீடித்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. பண்டிகைகள், தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதியில் இருந்து 6 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமைய...