புதன்கிழமை, மே 15
Shadow

Tag: வானிலை நிலவரம்

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கலம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்கிளல் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்! தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி பெய்த கனமழையால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் ஒரே நாள் இரவில் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளித்தது. மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததால் தண்ணீர் போக வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் முக்கிய வியாபார மையமாக உள்ள தி.நகரில் மழை வெள்ளம் தேங்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு பிறகே நிலைமை ஒரளவுக்கு சரி செய்யப்பட்டது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு சென்னை மற்றும் புறகர் பகுதிகள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வந்துள்ள நிலையில் மீண்டும் சென்னையில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது கலக்கத்தை ஏற்படுத...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்! வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ந்தேதி வடதமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும்  வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியால், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக...