6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!!
கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.
மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.
இதற்கிடையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ந் தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகள...
