சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை
சும்மா சுத்தும் வாகனஙகள் பறிமுதல் செய்யப்படும் போலீஸ் எச்சரிக்கை
முழு ஊரடங்கையொட்டி சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை பெருநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 19-ந்தேதி அதிகாலை முதல் 30-ந்தேதி இரவு 12 மணி வரையில் 12 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்சு மற்றும் அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு.
மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்சி உபயோகம் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ. தொலைவுக்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் பிற இடங்களுக்கு வாகனங்களில் செல...
