+2 தேர்வு இன்று தொடக்கம்..!
2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுத...
