டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்… துணை முதல்வர் வேண்டுகோள்!
டெல்லியில் காற்று மாசை குறைக்க மாதத்தில் ஒரு நாளாவது இதை செய்யுங்கள்... துணை முதல்வர் வேண்டுகோள்!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து காற்று மாசை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தவேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியர்கள் 7 நாட்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவேண்டும், கட்டுமான பணிகள் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, போக்குவரத்து சி...

