செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: Amir

அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

அமீரின் ” உயிர் தமிழுக்கு” படத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார். இதற்கு முன்னதாக யூடியூப் விமர்சகர் இளமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ஆன்டி இண்டியன் படத்தை ஆதம்பாவா தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச...
அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

அமீருடன் இணைந்த வெற்றிமாறன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பயணித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், "எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாக...