அரவிந்த் சாமியின் கள்ளபார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழில் முன்னணி நடிகராக திகழும் அரவிந்த் சாமி, தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ரோஜா, என் சுவாசக்காற்றே, பம்பாய் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர், சினிமாவில் இருந்து சிலகாலமாக விலகி இருந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் ‘கடல்' படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடித்துள்ள 'ரெண்டகம்', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
தற்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கள்ளபார்ட்'.
இப்படத்தில் ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இ...


