குற்றம் என்ன என்பதே தெரியாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய ஷாக்!
குற்றம் என்ன என்பதே தெரியாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய ஷாக்!
இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை உள்ளது. அனுப் சுரேந்திரநாத் மற்றும் திரிஷா சந்திரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.
அதன் சுருக்கம் வருமாறு —
இராசீவ் காந்தி கொலையில், பேரறிவாளனின் பங்கு என்ன என்பது பற்றி உறுதியாகத் தெரியாமலேயே அரசு நிறுவனங்கள் தொடர்ந்து அவரைச் சிறைக்குள் அடைத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தது மிகப்பெரும் அநியாயம்.
இந்தக் கொலைச் சதியின் மையமாக இருந்தவர்களை அடையாளங்கண்டு, அவர்களைக் கைது செய்ய முடியாமல், இவ்வழக்கில் விளிம்பு நிலையில் குற்றம் இழைத்தவர்களது வாழ்வைத் தியாகம் செய்ய வைத்தது, அரசு நிறுவனங்களின் போக்கிற்கு அருமையான எடுத்துக்காட்டாக உண்மையில் திகழ்கிறது.
மத்தியப் புலனாய்...
