வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Arulnidhi

அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது! ‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது அப்படக்குழு. இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது....
முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி!

முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி – அருள்நிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முதல்முறையாக இணைந்து நடிக்கும் உதயநிதி - அருள்நிதி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக தேர்வாகி உள்ளார். அரசியலில் பிசியாக இருந்தாலும், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. இவர் கைவசம் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக், கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி உதயநிதி அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் அருள்நிதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையும். உதயநிதியும், அருள்நிதியும் ம...