2 ஆயிரம் போலீஸ்… ஏராளமான கண்காணிப்பு கேமாரா… 150 பார்வையாளர்களுடன் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
2 ஆயிரம் போலீஸ்... ஏராளமான கண்காணிப்பு கேமாரா... 150 பார்வையாளர்களுடன் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்பு மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம்
போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்படுவர் போட்டியில் கல...
