பீஸ்ட் படத்தைக் காண ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த திருப்பூர் துணி நிறுவனம்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான முன் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.
தொடங்கிய நாள் முதலே முன்பதிவு வேகமாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களும் தீவிர கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகின்றன.
இந்த நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்
பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்த நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர்
புத்தாண்டை முன்னிட்டு 14ம் தேதி விடுமுறை அளித்திருந்த நிலையில் ஊழியர்களை உற்சாகப்...

