புதன்கிழமை, மே 15
Shadow

Tag: Bharathi Raja

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று!

இயக்குனர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் இளையராஜா தொலைப்பேசி மூலம் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்திருக்கிறார். பாரதிராஜா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொலைப்பேசி வாயிலாக பேசி அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவுக்கு கொரோனா உருதியானதை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பாரதிராஜா அறிக்கை!

சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பாரதிராஜா அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சமந்தாவின் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை உடனே நிறுத்த வேண்டும் - பாரதிராஜா அறிக்கை! சமந்தா நடிப்பில் வெளியாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு, அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த, போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும், தமி...