பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71 லட்சம்!?
சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது.
இன்று அந்த இறுதி எபிசோடு ஒளிபரப்பப்பட உள்ளது. பொதுவாகவே பிக் பாஸ் போட்டியின்
வெற்றியாளருக்கு 50 லட்சம் என்ற பரிசு தொகை அறிவிக்கப்படும்.
அந்த வகையில் ராஜுவுக்கும் 50 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டுள்ளது.
அது போக அந்நிகழ்ச்சியில் ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில்,
16 வாரங்கள் இருந்ததால் ராஜுவிற்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
எனவே ராஜு மொத்தமாக 71 லட்சம் ரூபாய்யை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளாராம்.
தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது...
