திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: Bihar

மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்!

மருந்து கடைகளுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்- பீகாரில் பதற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும்,  மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. இதையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது, மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். மருத்துவ கடை ஊழியர் ஒருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். கடைகள் மற்றும் பல வாகனங்கள் தீக்கிறையாகின. இதை கண்டு அங்கு திரண்ட மருந்து விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்பங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்....
பீகாரில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

பீகாரில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பீகார் மாநிலம் பாகல்பூரின் டாடர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதன் தாக்கத்தால் அந்த வீடு முழுவதும் இடிந்து விழுந்ததுடன், அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இந்த  வெடிவிபத்தில்  ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வெடிச்சத்தம் பல கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். வெடி விபத்து நிகழ்ந்த வீட்டில் இருந்தவர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வெடிகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என பகல்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளத...