நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா
நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு கொரோனா
நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி இந்த சோட்டா ராஜன். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி. 2015-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யட்டார். தாவூத் இப்ராஹிம் பழக்கம் ஏற்பட்டது அவருக்காக இந்தியாவில் பல நாசவேலைகளைச் செய்து கொடுத்துள்ளார் சோட்டா ராஜன். அந்தக்காலக்கட்டத்தில் சோட்டா ராஜன் பெயரில் வழக்குகள் பதிவானாலும் எந்த வழக்கிலும் இவரை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை. இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் 1988-ல் சோட்டா ராஜன் துபாயில் சென்று செட்டிலாகிவிட்டார். அங்கிருந்து சோட்டா ராஜன் கட்டளையிட இந்தியாவில் இவருக்கு வேலைசெய்ய பலர் தயாராக இருந்தனர்.
தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் விலகியதும் அவரது உயிருக்கு ஆபத்து வந்தது. 2000-ம் ஆண்டு பாங்காங்கில் வைத்து தாவூத்...
