ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: Cobra

படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் – நடிகர் விக்ரம்!

படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் – நடிகர் விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது விக்ரம் பேசியதாவது, ''உங்களுக்கு 'அந்நியன்' படம் பிடிக்கும் என்றால் இ...
கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்புகளில் நடித்த விக்ரம்!

கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்புகளில் நடித்த விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்...
சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு!

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட பாடல்கள் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமா...
கோப்ரா படப்பிடிப்பு முடிந்தது!

கோப்ரா படப்பிடிப்பு முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். 2019-இல் தொடங்கப்பட்ட கோப்ரா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைப்பெற்ற வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது. இதனை இயக்...
ஒருவழியாக விகரம்  ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

ஒருவழியாக விகரம் ”கோப்ரா” ஷூட்டிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அஜய் ஞானமுத்து டைரக்‌ஷனில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிச்சிக்கிட்டிருக்கார். ’கே.ஜி.எப்’ ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், பத்மப்பிரியா, கனிகா, மிருணாளினி ரவி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். கொரோனா முதல் அலையின்போது, ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை இந்தப் படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பினார்கள். பின்னர், கடந்த ஆண்டு மீண்டும் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தது படக்குழு. இந்தப் படத்தின் விக்ரம் தொடர்பான காட்சிகள...
கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்! டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது....