12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு!
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாட்ஸ் அப்பில் மாணவிகளுக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும்.
மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக உள்ள வாட்ஸ் அப் குழுவில் வினாத்...
