முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மோசடி புகார்!
முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி மோசடி புகார்
பிரபல கானா பாடகியாக இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமாகிவிட்டார்.
ஆண்கள் மட்டுமே கானா பாடலில் கோலோச்சிக் கொண்டிந்த நிலையில், பெண்களாலும் கானா பாடல் பாட முடியும் என்பதை நிரூபித்த இசைவாணி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடலில் இவர் பாடிய கானா பகுதி பலரையும் ஈர்த்தது.
இதைத் தொடர்ந்து விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர், சில வாரங்கள் கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இசைவாணி திருமணம் ஆன சில ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வரு...
