நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!
நாகர்கோவிலில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது!
குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மதியம் தொடங்கிய மழை இரவு வரை கனமழையாக விட்டு விட்டு நீடித்தது. இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
நாகர்கோவில் நகரில் பெய்த கன மழையால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
கனமழையால் மாநகரின் முக்கிய சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் டி.வி.டி. காலனி, செந்தூரா நகர், ரெயில்வே குடியிருப்பு, கம்பளம், ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்தது. சூறைக்காற்றுடன் வீசிய மழையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக நேசமணி நகர் ...
