சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: jallikattu 2022 live

பரிசாக கிடைத்த காரை நிறுத்த வீட்டில் இடமில்லை – புலம்பும் அவனியாபுர ஜல்லிக்கட்டு வீரர்!

பரிசாக கிடைத்த காரை நிறுத்த வீட்டில் இடமில்லை – புலம்பும் அவனியாபுர ஜல்லிக்கட்டு வீரர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் கடந்த 14-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கினார். அவருக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கப்பட்ட காரை அமைச்சர் மூர்த்தியிடம் இருந்து பெற்றார். மாடுபிடி வீரர் கார்த்திக் கூறியதாவது:- பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாகவும், அன்றாடும் சாப்பாட்டுக்கே போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். என்னை போன்று மாடுபிடி வீரர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான் அதிகம். எனக்கு குடியிருக்க வீடு இல்லை. &n...
சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ்பெற்றது. அங்குள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேடு கிராம பொதுமக்கள் மற்றும் மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் அளிக்கப்பட உள்ளது. சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு நாட்டுப்பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிகட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு...
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்! மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 7 சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த  சுற்றுக்கு முன்னேறினர். இதில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் களத்தில் நீண்டநேரம் களத்தில் நின்று காளைகளை அடக்கி முதலிடத்தல் இருந்தார். அவரைத் தொடர்ந்து அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார் பிற்பகலுக்குப் பிறகு முதலிடத்தை ...