வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: John Abraham

மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்!

மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மனைவியுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர்! பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம். இவரது மனைவி பிரியா ரன்சால். இந்த நிலையில் ஜான் ஆபிரகாமுக்கும், அவரது மனைவி பிரியா ரன்சாலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜான் ஆபிரகாம் கூறி இருப்பதாவது:- கடந்த 3 தினங்களுக்கு முன்பு கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தேன். இதைத் தொடர்ந்து நானும், எனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. நாங்கள் இருவரும் வீட்டில் தனிமையில் உள்ளோம். எங்களுக்கு லேசான அறிகுறிகள் தான் இருக்கிறது. நானும், எனது மனைவியும் தடுப்பூசி போட்டுள்ளோம். நாங்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். இவ்வாறு ...
‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் ஜான் ஆபிரஹாம்!

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் ஜான் ஆபிரஹாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் ஜான் ஆபிரஹாம்!! கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சலார் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் சலார் படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது க...
‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

‘தளபதி 65’ அப்டேட் – விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் ஹீரோ! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை படக்குழு அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...