சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Kajal Agarwal

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், குறுகிய காலத்திலேயே தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார். அதன்பின்னர் நடிப்பதை தவிர்த்து வந்தார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் - கவுதம்...
காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய...
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா! தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார். தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கத...
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் - நடிகை காஜல் அகர்வால்! தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி...