சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: Kalaipuli S Dhanu

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு – அதிரடியாக அறி்வித்த தயாரிப்பாளர்!

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு – அதிரடியாக அறி்வித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
இயக்குனர் வெற்றிமாறன் “ நாம்” அறக்கட்டளையின் சார்பாகத்திரை பண்பாடு ஆய்வகத்தைத் தொடங்கி உள்ளார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடி யாகச் சென்று, உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்பு நிலை மனிதர்களாக, முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டண மில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி எஸ்.தாண...