தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!
தபால் வாக்குகளை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்- பெட்டி கொண்டு வரும்படி அடம்பிடித்த மூதாட்டி!
கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.
தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றை சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு சீட்டை பெ...
