கொரோனா வைரஸ் பீதி – சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த இந்தியர்கள்!
கொரோனா வைரஸ் பீதி - சீனாவில் இருந்து 2வது கட்டமாக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள்!
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசினால் அந்நாட்டில் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். 14,000 நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.
இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்ச...
