பாலமேட்டில் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்றது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது.
இன்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீற...
