விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன். “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.
1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்.
யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய...



