சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: Mekka

கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து

கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா சிக்கல் 2020ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் ரத்து இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த புனிதப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 2 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கான கட்டணத்தை அவர்கள் பலரும் ஹஜ் கமிட்டியிடம் செலுத்தி இருந்தனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று 2 லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சவுதி அரேபியாவில் 95 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கும் பரவி இருக்கிறது...