வெள்ளிக்கிழமை, மே 1
Shadow

Tag: nagini

காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்! நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினிக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்து வந்தார். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
காதலரை கோவாவில் கரம் பிடிக்கப் போகும் ”நாகினி” நடிகை! பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நாகினி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட நடிகையாக மாறியவர் மௌனி ராய். சமூக ஊடகங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை சேர்த்திருக்கிறார். வரும் ஜனவரி 27 அன்று மௌனி ராய் தனது காதலன் சூரஜ் நம்பியாருடன் கோவாவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். பிரபல சமூக ஊடகப் பக்கமும் இதை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது மற்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட இன்ஸ்டாகிராமில் குவிந்தனர். மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் கோவாவின் டபிள்யூ ஹோட்டலில் ஆடம்பரமான திருமணத்தை நடத்துவார்கள் என்றும், பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது....