விழா மேடையில் MK ராதா காலில் விழுந்து வணங்கிய முதல்வர் MGR – old is gold
ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்குறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு.நெடுஞ்செழியன்...
இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும்
மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்
இப்போது ராதா அவர்கள் விருதுவாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார்.
திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!
மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!!
குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப்பார்து இ...
