திரையரங்குகளில் மீண்டும் ‘சங்கராபரணம்’
திரையரங்குகளில் மீண்டும் 'சங்கராபரணம்'
பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் இணைந்து காலத்தால் அழியாத இசைக் காவியமான 'சங்கராபரணம்' திரைப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியிடுகின்றனர்
இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த இசைக் காவியங்களில் ஒன்றான ‘சங்கராபரணம்’ திரைப்படம், அதிநவீன தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இம்மாதம் மீண்டும் வெளியாகிறது. பீப்பிள்'ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்புடன் புதுப்பொலிவுடன் வெளியிடுகின்றனர். இத்திரைப்படத்தின் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.
கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளியான ‘சங்கராபரணம்’, இந்தியப் பாரம்பரி...





