“இப்போது மட்டுமல்ல வாழ்நாளில் எப்போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது” – நாடாளுமன்றத்தில் ஆனல் தெறிக்க விட்ட ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,
"ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா" என பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “மாநில உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்றார்.
ராகுல்காந்தி தனது பேச்சில், "குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத 3 அடிப்படை விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
முதலாவதாக, நான் மிக முக்கியமானதாகக் கருதுவது, 'இரண்டு இந்தியா' யோசனை.
இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சா...
