ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை – 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகை - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக அவர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை வருகிறார். பின்னர் கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார்.
ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் உயர் போலீ...
