டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இந்த சந்தி...
