ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு ராஜ் டிவி இயக்குனர் ரவீந்திரன் கோடிக்கணக்கில் மோசடி?
தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர்.
இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ 10 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்ட பிரபல சின்னத்திரை நிறுவனத்தின் புகார் காவல் துறைக்கும் மற்றும் பல அரசு துறைகளுக்கும் போக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சின்னத்திரை வட்டார ஹாட் நியூஸ்.
அதாவது பிஏ என்ற பாரதி அசோசியேட் நிறுவனத்தின் சேர்மன் ட...
